News September 9, 2025
துணை ஜனாதிபதியின் பணிகள்

ஜனாதிபதிக்கு அடுத்து 2-வது உயரிய அரசமைப்பு பதவி துணை ஜனாதிபதி பதவிதான். ராஜ்யசபாவிற்கு தலைவராக அவையை வழிநடத்துவது இவரின் பொறுப்பு. பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு திடீர் மரணம் ஏற்பட்டால், அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை (அதிகபட்சம் 6 மாதங்களுக்கு) அவரின் பணிகளையும் துணை ஜனாதிபதியே மேற்கொள்வார். உங்களுக்கு ஒன்று தெரியுமா? துணை ஜனாதிபதி பதவிக்கு சம்பளம் கிடையாது.
Similar News
News March 6, 2026
அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.. ஓபிஎஸ் ஷாக்

திமுகவில் இணைந்த OPS, தனது ஆதரவாளர்களை அக்கட்சியில் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், அவரது அணியில் இருந்த பலரும் அதிமுகவிற்கு திரும்பி ஷாக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் T ராமசாமியின் மகன் TR சீனிவாசன் EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
News March 6, 2026
விஜய் விவாகரத்து சர்ச்சை… த்ரிஷாவின் புதிய PHOTOS

விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷாவின் பெயரும் அடிபடுகிறது. இதற்கிடையே, <<19308601>>விஜய் – த்ரிஷா<<>> இருவரும் நேற்று ஒன்றாக திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இதனால், த்ரிஷாவை SM-ல் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் அணிந்த அதே ஆடையில் எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள த்ரிஷா, ‘எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டு ❤️ எமோஜியை பதிவிட்டுள்ளார்.
News March 6, 2026
UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி

TN-ல் துணை ஆட்சியராக பணியாற்றும் ராஜேஸ்வரி சுவி UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த அவர், ஏற்கெனவே TNPSC குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11-வது இடம் பிடித்து துணை ஆட்சியராக உள்ளார். 2018-ம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவர், போட்டி தேர்வுக்கு தீவிரமாக படித்து இன்று IAS அதிகாரியாக உயர்ந்துள்ளார். இந்த சிங்கப் பெண்ணை வாழ்த்தலாமே!


