News April 19, 2025
மதிமுகவில் இருந்து துரை வைகோ விலகல்!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண்மையில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டார். இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனாலும் அடிப்படை தொண்டனாக கட்சியில் இருப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
புடின் முன்னிலையில் PAK-க்கு செய்தி சொன்ன PM மோடி

ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பாகிஸ்தானுக்கு PM மோடி கூர்மையான செய்தியை அனுப்பியுள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று செயல்படுவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ரஷ்யாவின் குரோகஸ் நகரில் நடந்த தாக்குதலுக்கு தீவிரவாதம் தான் முழு காரணம், அதற்கு எதிராக கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
News December 5, 2025
குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறாங்களா?

குழந்தைகள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் உடனே அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்காதீர்கள். அவர்கள் ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதைதான் அவர்களும் சாப்பிடணும் என சொல்லுங்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனால், நாளடைவில் அவர்கள் அனைத்திற்கும் அடம்பிடிப்பார்கள் என குழந்தைகள் நல டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே குழந்தைகளை அப்படி வளர்க்காதீங்க. SHARE.
News December 5, 2025
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. மத்திய அரசு முடிவு

மக்களின் துல்லியமான லொகேஷனை (A-GPS) எப்போதும் On செய்து வைத்திருப்பதை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, டவர் சிக்னல் படி தோராயமான லொகேஷனையே பெற முடிவதால், புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இது மக்களின் தனியுரிமையை பாதிக்கும் என ஆப்பிள், கூகுள், சாம்சங் நிறுவனங்கள் எதிர்க்கின்றன.


