News April 15, 2025

அன்புமணிக்கு அட்வைஸ் கொடுத்த துரை வைகோ

image

பாமகவில் உட்கட்சி மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணிக்கு துரை வைகோ அட்வைஸ் செய்துள்ளார். ராமதாஸின் அரசியல் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதை அன்புமணி புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். அவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்னையை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்க வேண்டும். அதுதான் அக்கட்சிக்கும் நல்லது. அதே சமயம் தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Similar News

News December 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 540
▶குறள்:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
▶பொருள்: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

News December 5, 2025

பகவத் கீதையை புடினுக்கு பரிசளித்த PM மோடி

image

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு PM மோடி பகவத் கீதையை பரிசளித்துள்ளார். இதுபற்றி X-ல் PM மோடி, பகவத் கீதையின் போதனைகள் உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிபர் புடினுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

News December 5, 2025

பிரித்து ஆளும் கொள்கை உடைய திமுக: தமிழிசை

image

தமிழ் வேறு இந்து மதம் வேறு என்று கூறிய சட்ட அமைச்சர் ரகுபதிக்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ் என்றும், தமிழையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் பிரித்தாலும் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று X-ல் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!