News August 23, 2025
சளி, இருமலை விரட்டும் தூதுவளை தேநீர்!

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.
Similar News
News August 23, 2025
BREAKING: உங்களிடம் பழைய பைக் இருக்கா? இனி ₹2,000

20 ஆண்டுகளுக்கு மேல் (2005-க்கு முன் வாங்கிய) பழமையான வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ₹5,000-லிருந்து ₹10,000ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் ₹2,000ஆகவும், 3 சக்கர வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ₹5,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
News August 23, 2025
அதற்காக சூனியம் செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன்

‘பரதா’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பாரா என்பதில் தனக்கு சந்தேகம் இருந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால், அவரை எப்படியாவது இப்படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காக சூனியம், பூஜை செய்ததாக கூறியுள்ளார்.
News August 23, 2025
வங்கியில் 500 ஆபிசர் பணியிடங்கள்

நாடு முழுவதும் மஹாராஷ்டிரா வங்கியில் காலியாகவுள்ள 500 General Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (அ) CA. வயது வரம்பு: 22 – 35. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பக் கட்டணம்: ₹1,180 (தளர்வுகளும் உண்டு). விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.30. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <