News June 25, 2024
டக்வொர்த் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்

டக்வொர்த் லீவிஸ் விதியை கண்டுபிடித்த ஃபிராங்க் டக்வொர்த் (84) வயது மூப்பு காரணமாக காலமானார். 1997இல் முதல்முறையாக மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற பல காரணிகளைக் அடிப்படையாகக் கொண்டு, 2ஆவது பேட்டிங் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கிறது.
Similar News
News March 2, 2026
No Bro., Why Bro? அண்ணாமலை

நேற்று CM ஸ்டாலின் தனது 73 பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு X தளத்தில் ராகுல் காந்தி வாழ்த்து கூறியிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு பயன்படுத்திய சகோதரர் வார்த்தை இம்முறை இடம்பெறவில்லை. இதுபற்றி தனது X பதிவில் விமர்சனம் வைத்துள்ள அண்ணாமலை, இந்தாண்டு சகோதரர் வார்த்தையை ராகுல் பயன்படுத்தாது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு DMK-CONG தொகுதிப் பங்கீடு சிக்கலே காரணம் என பாஜகவினர் கூறுகின்றனர்.
News March 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 625 ▶குறள்: அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். ▶பொருள்: துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
News March 2, 2026
புதிய சாதனை படைத்த இந்திய அணி

WI-க்கு எதிராக <<19275716>>196 ரன்கள் சேஸிங்<<>> செய்ததன் மூலம், டி20 WC வரலாற்றில் தனது அதிகபட்ச ரன் சேஸிங்கை இந்தியா பதிவு செய்துள்ளது. அத்துடன், டி20 WC வரலாற்றில் இது 3-வது அதிகபட்ச ரன் சேஸிங் ஆகும். அதேபோல, டி20 WC தொடர்களில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையை பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த 3 அணிகளும் 6 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.


