News April 20, 2025
அதிரடி பாதைக்கு திரும்பிய துபே.. 50 அடித்து அசத்தல்

கடந்த சில ஆட்டங்களாக தடுமாறி வந்த ஷிவம் துபே மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி பாதைக்கு திரும்பியுள்ளார். முதலில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய அவர் பின் அதிரடி காட்ட தொடங்கினார். 31 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் அரைசதத்தை துபே பதிவு செய்தார். தோல்விகளால் துவண்டு போயிருந்த சென்னை ரசிகர்களுக்கு தூபே தற்போது அறுதல் கொடுத்துள்ளார்.
Similar News
News November 4, 2025
கனமழை வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<18195152>>கனமழைக்கான மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், திருவாரூர், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்க!
News November 4, 2025
முருகனை தரிசித்த ‘ஜனநாயகன்’ இயக்குநர்

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது எதிர்பார்ப்புகள் ஏராளம். இந்த படம் வரும் ஜன.9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் H.வினோத், இயக்குநர் ரா.சரவணனுடன் இணைந்து பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். என்ன வேண்டிக் கொண்டிருப்பார் H.வினோத்? கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News November 4, 2025
இந்தியாவின் லெஜண்ட் தொழிலதிபர் காலமானார்

இந்தியாவின் பழம்பெரும் கூட்டு தொழில் நிறுவனமான, இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா (85), வயது முதிர்வு காரணமாக காலமானார். மும்பையில் 1914-ல் தொடங்கப்பட்ட இக்குழுமம், இந்தியாவில் தொடங்கி பல்வேறு உலக நாடுகளில் விரிவடைந்துள்ளது. அசோக் லேலண்ட் வாகனங்கள் இந்த குழுமத்திற்கு சொந்தமானவை தான். பிரிட்டனில் வசித்து வந்த கோபிசந்த், 2023-ல் இக்குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.


