News March 1, 2025
துபாய் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ்

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Similar News
News March 18, 2026
உதவிகேட்டு ஏமாற்றி விடுகிறார்கள்: GV பிரகாஷ்

கல்வி, மருத்துவ செலவுகளுக்காக SM-ல் யார் உதவி கேட்டாலும் உடனே பணம் அனுப்பி உதவும் பிரபலங்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். இதுகுறித்து தனது ‘Happy Raj’ பட நிகழ்ச்சியில் கேட்டபோது, உதவி கேட்டு தன்னை பலர் ஏமாற்றி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். உதவி கேட்டு SM-ல் வரும் மெசேஜ்களில் 90% சரியாக இருக்கும் என்றும், சிலர் ஏமாற்றி விடுகிறார்கள்; அதை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
News March 18, 2026
யாருடன் கூட்டணி? ராமதாஸ் முக்கிய முடிவு!

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று கூட உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அங்குச் செல்ல வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி தடையாக இருப்பதால் ராமதாஸ் தரப்பு பெரும் குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. இதனால், ராமதாஸின் முடிவுக்காக ஆதரவாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.
News March 18, 2026
டீ-க்கு ₹12, மட்டன் பிரைக்கு ₹200

தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், எந்தெந்த உணவுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற புதிய விலை <<19413031>>பட்டியலை <<>>ECI வெளியிட்டுள்ளது. 2 இட்லி ₹40, வடை ₹15, பொங்கல் ₹50, கிச்சடி ₹60, 2 பூரி, மசால் ₹60, பரோட்டா ₹40, காபி ₹18, டீ ₹12, மோர் ₹13, எலுமிச்சை ஜூஸ் ₹15, ரோஸ் மில்க் ₹40, சைவ சாப்பாடு ₹110, அசைவ சாப்பாடு ₹350, சிக்கன் பிரை (100கி) ₹100, மட்டன் பிரை (100கி) ₹200, சமோசா ₹20, பப்ஸ் ₹20.


