News May 5, 2024
புதிய சாதனை படைத்தார் டு ப்ளெசிஸ்

டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த 14ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆர்சிபி கேப்டன் டு ப்ளெசிஸ். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் எடுத்த அவர் இந்த பெருமையைப் பெற்றுள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (14,562) உள்ளார். அதைத் தொடர்ந்து மாலிக் (13,360), பொல்லார்ட் (12,900), கோலி (14,536), அலெக்ஸ் ஹேல்ஸ் (12,319), வார்னர் (14,232), ரோஹித் (11,482) ஆகியோர் உள்ளனர்.
Similar News
News February 6, 2026
பொறாமை கொண்டவர்களை அடையாளம் காண 4 டிப்ஸ்!

★ஒரு நல்ல செய்தியைப் பகிரும்போது, அவர்களின் கண்களில், முகபாவனைகளில் உண்மையான மகிழ்ச்சி இருக்காது ★கடினமாக உழைத்து ஒரு இலக்கை அடைந்தால், அதிர்ஷ்டம் என்று ஈசியாக கூறிவிடுவார்கள் ★பொறாமை கொண்டவர்கள் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க எதிர்மறையான வதந்திகளைப் பரப்ப முயற்சிப்பார்கள் ★உங்களை புறக்கணித்து மற்றவர்களுடன் பேசுவது பொறாமையின் மற்றொரு அறிகுறி. கவனமா இருங்க!
News February 6, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹4,640 குறைந்து மக்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தது. அதேபோல், வெள்ளியும் 1 கிராம் ₹20 குறைந்து ₹300-க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைய மிகப்பெரிய வாய்ப்புள்ளது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் $192.06 (இந்திய மதிப்பில் ₹17,348) குறைந்து $4,742.36 ஆக உள்ளது. எனவே, இன்று தங்கம் வாங்க நினைப்போர் ரெடியா இருங்க.
News February 6, 2026
WPL: RCB-ன் சாம்பியன் கொண்டாட்டம் (PHOTOS)

18 ஆண்டுகளாக ஒரு கோப்பைக்காக தவியாய் தவித்த RCB ரசிகர்களுக்கு, தொடர்ச்சியாக 3 கோப்பைகள் கிடைத்துள்ளன. 2024-ல் கோப்பையை வென்ற RCB பெண்கள் அணி, நேற்று 2-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. இந்த சந்தோஷத்தை அவர்கள் ஆனந்தமாக கொண்டாடி தீர்த்த போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். இடது பக்கமாக Swipe செய்து, பாருங்க. IPL இந்த ஆண்டு மீண்டும் RCB ஆண்கள் அணி, சாம்பியன் ஆகுமா?


