News May 19, 2024

விருதை யாஷ் தயாளுக்கு சமர்ப்பித்த டு பிளெஸ்ஸி

image

CSK அணிக்கு எதிரான போட்டியில், 54 ரன்கள் எடுத்த RCB அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின்பு பேசிய அவர், “ஆட்டநாயகன் விருதை நான் யாஷ் தயாளுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் நம்ப முடியாத வகையில் பந்து வீசினார். கடினமான பிட்ச்சில் கடைசி ஓவரில் 17 ரன்களில் தோனியை அவுட்டாக்கியதை இப்போதுகூட நம்ப முடியவில்லை. மேட்சை வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி” என்றார்.

Similar News

News March 4, 2026

மகிழ்ச்சியா இருக்கணுமா? இவங்கள AVOID பண்ணுங்க

image

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்: 1)உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2) உங்களை அவமதிப்பவர்கள், உங்களுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் 3)உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4)உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள், தலைகுனிய செய்பவர்கள். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.

News March 4, 2026

மேலும் ரூ.1,000 அறிவித்தார் ஸ்டாலின்.. இன்ப அதிர்ச்சி

image

டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ₹1,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 24,033 டாஸ்மாக் ஊழியர்கள் பயன் பெறுவர் என்றும், அவர்களுக்கு ESI மருத்துவ, சமூக பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

பட்டாசை வெடிக்கும் நியூசிலாந்து

image

T20 WC அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அபாரமாக விளையாடி வருகிறது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் நியூசிலாந்து அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. டிம் சீஃபர்ட் அரைசதம் விளாசி ரபாடா பந்தில் கிளின் போல்ட் ஆனார். ஆலன் அரைசதத்தை கடந்து களத்தில் உள்ளார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன.

error: Content is protected !!