News March 18, 2024
அண்ணாமலையார் திருக்கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அவர், அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
Similar News
News November 27, 2025
தி.மலையில் பயங்கர தீ விபத்து!

திருவண்ணாமலை: காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கற்பூர கடையில் நேற்று(நவ.26) இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அருகிலிருந்த கடைகள் மற்றும் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
News November 27, 2025
தி.மலை: பெண்ணின் சேலையில் பற்றி எரிந்த தீ!

அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றும் இடத்தில் நேற்று(நவ.26) பெண் ஒருவரின் சேலையில் திடீரென தீப்பற்றி சிறிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவர் சிறுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News November 27, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


