News March 23, 2024

தேனியில் டி.டி.வி தினகரன் போட்டி

image

நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு தேனி, திருச்சி என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தேனி தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி, தானே களமிறங்க முடிவு செய்திருக்கிறார். தனது விருப்பத்தின்படியே டிடிவி தேனியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Similar News

News April 29, 2025

திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு

image

திருவாரூர் மாவட்டத்தின் பயோடேட்டா குறித்து உங்களுக்கு தெரியுமா? திருவாரூர் மாவட்டம் கடந்த 1997-இல் தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து பிரித்து கலைஞரால் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டது. 9 தாலுகா, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 573 வருவாய் கிராமங்கள் என பரந்து விரிந்த நிர்வாக அமைப்பை திருவாரூர் மாவட்டம் கொண்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்யவும் !

News April 29, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 29, 2025

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. அப்போது, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!