News November 4, 2025
Drug overdose: வாரந்தோறும் 12 பேர் பலி

இந்தியாவில் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 12 பேர், மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. 2019 முதல் 2023 வரை 3,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ‘Overdose’ காரணமாக நிகழ்ந்துள்ளன. Opiod வலி நிவாரணிகள், பதற்றத்தை குறைக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்று கூறும் நிபுணர்கள், போதைப்பொருள் அதிகரிப்பின் அச்சுறுத்தலை இது சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
Similar News
News November 5, 2025
நகை கடன்… முக்கிய அறிவிப்பு

2026 ஏப்.1 முதல், தங்கத்தைபோல் வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என RBI அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் பண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. நீங்கள் ₹2.5 லட்சம் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85% கடன் கிடைக்கும். ₹5 லட்சம் வரை 80% வரையும், அதற்கு மேல் 75% வரையும் கடன் பெறலாம்.
News November 5, 2025
உயர்சாதியினர் கைகளில் இந்திய ராணுவம்: ராகுல்

இந்திய ராணுவம், நாட்டின் மக்கள் தொகையில் 10% உள்ள உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், கார்ப்பரேட், அரசு துறை பதவிகள், நீதித்துறையிலும் உயர் சாதியினரே கோலோச்சுவதாகவும், மீதமுள்ள 90% மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 5, 2025
‘ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்

‘ஆர்யன்’ படத்தின் கிளைமாக்ஸை மாற்றி வெளியிடுவதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கிளைமாக்ஸ் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் வந்ததால், ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த இன்னொரு கிளைமாக்ஸை இன்று முதல் படத்தில் சேர்த்து வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். நீங்கள் ‘ஆர்யன்’ படம் பார்த்தீங்களா? படம் எப்படி இருந்தது என கமெண்ட் பண்ணுங்க.


