News October 29, 2025
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா ஆஜர்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக ED-யும் விசாரணையை தொடங்கியது. இதில், இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணா இன்று ஆஜரான நிலையில், அவரிடம் ED விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News October 29, 2025
திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்: EPS

நகராட்சி நிர்வாகத்துறை <<18140241>>பணி நியமனத்தில்<<>> நடந்த ஊழல் தொடர்பாக, பொறுப்பு DGP வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் போலீஸ் கைகளை கட்டாமல் இருக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் அரசுப்பணி கனவை, தங்கள் கமிஷன் கொள்ளைக்காக திமுக அரசு சிதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் நடந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News October 29, 2025
குரூப் 4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற உத்தரவு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள், தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய TNPSC அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்காக முதற்கட்ட தேர்வர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று முதல் நவ.7-ற்குள் ஒருமுறை பதிவு பிரிவில் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். உரிய நேரத்திற்குள் பதிவேற்ற தவறினால், அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
News October 29, 2025
தமிழகத்தில் ‘SIR’ பணிகளுக்கு தவெக எதிர்ப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) என்ற பெயரில் வாக்காளர்களை நீக்குவதோ, இணைப்பதோ கண்டனத்திற்குரியது எனவும், இதனை தவெக எதிர்ப்பதாகவும் அருண்ராஜ் கூறியுள்ளார். வரும் 4-ம் தேதி முதல் TN உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தொடங்க உள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்த்து வரும் நிலையில், SIR பணிகளுக்கான எதிரணியில் தவெகவும் இணைந்துள்ளது. அதிமுக, பாஜக ஆதரவு தெரிவித்துள்ளன.


