News February 28, 2025
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு: கவர்னர்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் கைவிடப்பட்ட கொள்ளைப்புறம் போல் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். தென்மாவட்ட தொழில்முனைவோர், கல்வியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தொழில்துறைக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் மக்களுக்கு அது தரப்படவில்லை என சாடினார். தென்மாவட்ட இளைஞர்களிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருப்பதும் கவலையளிக்கிறது என்று கூறினார்.
Similar News
News March 27, 2026
ஐஜேகே வேட்பாளர்களை அறிவித்தார் பாரிவேந்தர்

அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசன், குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், தான் போட்டியிடவில்லை என்று பாரிவேந்தர் கூறியுள்ளார்.
News March 27, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ஷாக் கொடுத்தது. மேலும், ஈரான் மீதான தாக்குதலை கூடுதலாக 10 நாள்களுக்கு (ஏப்.6 வரை) நிறுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளதாலும், தங்கம் விலை தொடர்ந்து உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ் $71 (இந்திய மதிப்பில் ₹6,723) உயர்ந்து $4,454-க்கு வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.
News March 27, 2026
புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டி

தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதிமுக உடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில் ‘நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்’ என்ற அவர், இம்முறை தன்னுடைய கட்சி 70 தொகுதிகள் வரை போட்டியிடும் என்றார். மேலும், புதிய தமிழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 29-ல் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


