News May 16, 2024
வேற வழியில ஓட்டிட்டு போங்க

மழை வெள்ளம் இருக்கும் பகுதிகளை விடுத்து மாற்று வழியில் அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து பழுதாகி நின்றது. இந்நிலையில், அனைத்து ஓட்டுநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை கவனத்துடன் இயக்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
விஜய் சேதுபதியை இயக்க ரெடியாகும் மகிழ் திருமேனி!

‘விடாமுயற்சி’ படம் தோல்வியாக அமைந்தாலும், இயக்குநர் மகிழ் திருமேனி தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். தமிழ், ஹிந்தி என இருமொழி படமாக உருவாகும் இதில், ஹீரோவாக விஜய் சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும், ஷ்ரத்தா கபூர், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ‘தடம்’, ‘தடையற தாக்க’ போன்ற ஒரு அசத்தல் படத்தை மீண்டும் மகிழ் கொடுப்பாரா?
News November 13, 2025
மெட்ரோ ரயில்வே டிராக்கில் சோலார் பேனல்கள்

நாட்டிலேயே முதல்முறையாக, RRTS (அ) மெட்ரோ ரயில்வே டிராக்குகளில் சோலார் பேனல்களை வைத்து மின் உற்பத்தி செய்யும் ‘Solar on track’ எனும் திட்டம், உ.பி.,யின் துஹாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 17,500 kWh எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஆண்டு முழுவதும் 16 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுக்க முடியும். 550 Wp திறன் கொண்ட 28 உயர்திறன் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.
News November 13, 2025
எங்கு பார்த்தாலும் Content Creator-கள் தான்!

இந்தியாவில் தற்போது 14- 24 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினரில் சுமார் 83% பேர் Content Creator-களாக மாறி இருக்கிறார்களாம். 93% பேர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து தொடர்ந்து யூடியூப்பில் பார்த்து வருவதாகவும், 87% பேர் ஏதாவது ஒரு யூடியூப் பக்கத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 78% பேர், யூடியூப்பில் யாரோ ஒருவர் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.


