News April 24, 2024
காபி குடித்தால் கொழுப்பு குறைய வாய்ப்பு

காலையில் எழுந்தவுடனும், தலைவலி உள்ளிட்ட நேரங்களின்போதும் சூடான காபி, டீ அருந்துவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் காபி அருந்துவது ஸ்டமினாவை அதிகரிக்க செய்யும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், காபி அருந்துவது நமது கவனத்தைக் கூர்மையாக வைத்திருக்கவும், உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவும் என்றும், தலைவலி மற்றும் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையை குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Similar News
News January 13, 2026
சிவகங்கை: பெண் பக்தர் பலியான சம்பவம்; ஒருவர் கைது.!

சிவகங்கை மாவட்டம், கீழடி அருகே ஒரு குழுவினர் ஜன.9ம் தேதி பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். அப்போது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், பரமக்குடியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா (35) என்ற பெண் படுகாயமடைந்து, மதுரை G.H-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். CCTV காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் திருப்பதி (42) என்பவரை கைது செய்துள்ளனர்.
News January 13, 2026
பாஜகவின் இசைக்கு ஆடும் அதிமுக: மனோ தங்கராஜ்

பிரிந்து கிடக்கும் அதிமுக, உள்கட்சி பிரச்னைகளை சமாளிக்க பாஜகவின் இசைக்கு ஏற்ப ஆட்டம் போடுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். குமரியில் பேசிய அவர், PM மோடி எத்தனை முறை TN வந்தாலும் அவர்களுக்கு(பாஜகவுக்கு) ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றார். மேலும், அண்ணாவின் உரிமை பிரச்னைக்கே(பராசக்தி பட வசனம் நீக்கம்) அதிமுக குரல் கொடுக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
ஒரே கதை.. ஒரே ஹீரோயின்.. 3 படங்கள்!

தெலுங்கில் ‘துளசி’(2007) படம் பெரிய ஹிட்டடித்தது. அதை ‘விஸ்வாசம்’(2019) என மாற்றி எடுக்க, மெகா ஹிட். இதை இன்னும் பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் தெலுங்கில் ‘மன சங்கர வரபிரசாத் காரு’(2026) என ரிலீஸ் செய்ய, மீண்டும் ஹிட். இதில் முக்கிய பாய்ண்ட், 3 படத்திலும் நயன்தாராதான் ஹீரோயின். அதைவிட பெரிய டிவிஸ்ட், ‘துளசி’ ஹீரோ வெங்கடேஷ், ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.


