News March 30, 2025
ஹீமோகுளோபின் எகிற இத குடிங்க போதும்!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க, இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகமுள்ள ப்ளம்ஸ் பழம் (அ) பன்னீர் திராட்சை ஜூஸ் எடுத்துக்கொள்ள டாக்டர் அறிவுறுத்துகின்றனர். மாதுளை ஜூஸும் ஆகச்சிறந்ததுதான். அதேபோல், இரும்புச்சத்துடன் ஃபோலேட் சத்து அதிகமுள்ள பீட்ரூட் ஜூஸை பருகலாம். நெல்லிக்காய் + முருங்கைக்கீரையை அரைத்து குடித்தால் ஹீமோகுளோபின் அதிகரிப்பதோடு, தலைமுடி வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
Similar News
News April 1, 2025
வாயுக் கசிவு… ஆலை ஓனர் பலி… 60 பேருக்கு என்னாச்சு?

ராஜஸ்தானில் ஆசிட் தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயுக் கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவில் ஏற்பட்ட வாயுக் கசிவை கட்டுப்படுத்த முயன்றபோது, ஆலையின் உரிமையாளர் சுனில் சிங்கால் உயிரிழந்துள்ளார். அருகே வசித்த 60-க்கும் மேற்பட்டோர் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக ஆலையை சுற்றி வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
News April 1, 2025
அண்ணாமலைக்கு சேகர்பாபு சவால் .. ஆய்வுக்கு ரெடியா?

டெல்லியில் விழுந்த அடியை மறைக்க தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம் சுமத்துவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். குறைகளைக் கூட, குற்றச்சாட்டுகளாக கூறுபவர்களுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆதிதிராவிடர் விடுதிகளில் வழங்கும் உணவு தரமாக இல்லை எனக் கூறும் அண்ணாமலையை எங்களுடன் ஆய்வு செய்ய வரச்சொல்லுங்கள் என்று சவால் விடுத்தார்.
News April 1, 2025
ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ரெடி

ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஸ்பைடர் மேன்-4ன் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. Spider-Man: Brand New Day என பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2026 ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. ஸ்பைடர் மேன் – 4க்கு ரெடியா?