News September 26, 2025
செரிமான பிரச்னை நீங்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

✱வசம்பு தேநீர் செரிமானத்தை மேம்படுத்தி, அஜீரணத்தை போக்க உதவுகிறது ➤வசம்பை நன்கு கழுவி, நசுக்கிக் கொள்ளவும் ➤தேவையான அளவு தண்ணீரை சேர்த்து, 3- 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் ➤தேவைப்பட்டால், கருவேப்பிலையும் சேர்க்கலாம் ➤அதை வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் அல்லது வெல்லம் சேர்த்தால், ஹெல்தியான வசம்பு டீ ரெடி. இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News September 26, 2025
BREAKING: காலாண்டு விடுமுறை .. முக்கிய அறிவிப்பு

காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செப்.27 (நாளை) முதல் அக்.5 வரை 9 நாள்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இதை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
News September 26, 2025
இந்தியாவில் நிறைய பேர் யூஸ் பண்ணும் SIM CARD எது?

இந்தியாவில் 4 முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், BSNL-ஐ தவிர ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தனியாருக்கு சொந்தமானவை. கடந்த ஜூலையில் TRAI வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஜியோ சிம் கார்டுகள்தான் பயன்பாட்டில் அதிகம் உள்ளதாம். 47.75 கோடி சந்தாதாரர்களுடன் Jio முதலிடத்திலும், 39.14 கோடி சந்தாதாரர்களுடன் Airtel 2து இடத்திலும் உள்ளன. நீங்க எந்த சிம் யூஸ் பண்றீங்க?
News September 26, 2025
இனி பணம் அனுப்ப OTP மட்டும் போதாது

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை RBI வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி Two-factor authentication முறை பின்பற்றப்படும். அதாவது, ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும்போது வழக்கம்போல் முதலில் OTP-ஐ உள்ளிட வேண்டும். பின்னர், உங்களின் பாஸ்வேர்டு, PIN நம்பர், கைவிரல் ரேகை இவற்றில் ஏதாவது ஒன்றை 2-வதாக உள்ளிட்டால் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்த நடைமுறை 2026, ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது.