News October 1, 2025
மழை சீசனில் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மூலிகை தேநீர் நல்ல நிவாரணம் தரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *தேவையான பொருள்கள்: துளசி, இஞ்சி, ஏலக்காய் பொடி, மிளகு பொடி, சீரகம், பட்டை பொடி, மஞ்சள், டீ தூள் & வெல்லம் ★செய்முறை: தண்ணீரில் துளசி இலையுடன், டீ தூள், சீரகம் என அனைத்தையும் போட்டு கொதிக்க வைங்க. இஞ்சியை தட்டிப்போட்டு, நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி குடிக்கவும். SHARE IT.
Similar News
News October 1, 2025
கல்வியும், வேலைவாய்ப்புமே மருந்தாகும்: வைரமுத்து

கரூர் துயர சம்பவம் குறித்து விசாரித்து வரும் Retd நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், இறந்தவர்களின் குடும்பங்களில் வேலை வாய்ப்பு, கல்வி கற்கும் வாய்ப்புடையவர்கள் பற்றி அரசிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார். வேலைவாய்ப்பும், கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும் என தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
கூட்ட நெரிசலில் சிக்கினால் தப்பிப்பது எப்படி?

➤கூட்ட நெரிசலில் சிக்கினால் பதற வேண்டாம் ➤யாரேனும் தள்ளும்போது கால்களை நிலத்தில் அழுத்தமாக வைத்து, Boxing Position-னில் நில்லுங்கள் ➤தள்ளும் திசைக்கு எதிர்திசையில் செல்ல வேண்டாம் ➤மூச்சுதிணறல் ஏற்படாமல் இருக்க சுவர்களுக்கு அருகில் செல்வதை தவிருங்கள் ➤கீழே விழுந்துவிட்டால், உடல் உறுப்புகளை பாதுகாக்க, கால்களை சுருட்டி ஒரு பக்கமாக படுத்துகொள்ளுங்கள். உயிர்காக்கும் தகவலை SHARE பண்ணுங்க.
News October 1, 2025
லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கான ரெப்போ வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெப்போ ரேட் வட்டி தற்போதைய 5.5% -ஆகவே தொடரும் என்று தெரிவித்துள்ளார். இதனால், தனிநபர் கடன், வாகனம் மற்றும் வீட்டுக்கடன் வாங்கியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.