News June 15, 2024
ஆழ்ந்த தூக்கத்துக்கு இதை குடியுங்கள்!

உடலையும் மனதையும் சீர்படுத்தும் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுபவரா நீங்கள்? இனி கவலையே வேண்டாம். ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த உதவும் மெலெட்டினின் ஹார்மோனை சுரக்க வைக்கும் பண்புகள் நிறைந்த மாமருந்து திப்பிலி பால். திப்பிலி வேரை பொடியை மிதமான சூட்டில் பாலுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்தால் திப்பிலி பால் தயார். இதனை படுப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு குடியுங்கள் போதும் சரியான நேரத்தில் தூக்கம் வரும்.
Similar News
News November 13, 2025
இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட தயார்: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குலுக்கு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக <<18263443>>அந்நாட்டு அரசு பேசி<<>> வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட பாக் தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அதேபோல் சாதாரண கேஸ் வெடிப்பை, வெளிநாட்டு சதி என்பது போல் இந்தியா கூறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
எனது இன்ஸ்பிரேஷன் அஜித்: துல்கர் சல்மான்

அஜித் இந்த வயதிலும் தனது பேஷனை நோக்கி பயணிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். அஜித்தின் ரேஸிங் வீடியோக்கள் தனக்கு பெரும் உத்வேகத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கு அஜித் பைக்கிலேயே சுற்றி வந்ததை பற்றி பெருமையாக பேசிய துல்கர், அவருக்கு பிடித்ததை தயக்கம் இன்றி செய்து வருவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
காவிரி குறுக்கே அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு

காவிரியில் போதுமான அணைகள் இருப்பதால், புதிய அணை கட்ட தேவையில்லை என SC-யில் தமிழ்நாடு தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிதாக அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும். இதனால், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆரம்ப கட்டத்திலேயே தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


