News August 9, 2024
மாதவிடாய் காரணமாக கனவு பறிபோனது: மீராபாய் சானு

ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மாதவிடாய் காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளார். 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், 4ஆவது இடத்தை பிடித்தார். தோல்வி குறித்து அவர் பேசுகையில், “போட்டியின்போது எனக்கு மாதவிடாயின் மூன்றாவது நாள். மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். அதனால் பதக்கம் பறிபோனது” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
Similar News
News September 16, 2025
பாஜகவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி வைக்க என்ன காரணம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜெ., மறைந்த போது, சிலர் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகவும், அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தான் என்று தெரிவித்த அவர், அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார். ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக என்பது புரிகிறது. ஆனால், ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
News September 16, 2025
யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்ட 7 இந்திய தளங்கள்

இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் யுனெஸ்கோ 7 புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. *டெக்கான் ட்ராப்ஸ்(மகராஷ்டிரா) *செயின்ட் மேரி தீவு (கர்நாடகா) *மேகலாயன் ஏஜ் குகைகள்(மேகாலயா) *நாகா ஹில் ஓபியோலைட் (நாகலாந்து) *சிவப்பு மணல் மேடுகளான எர்ரா மட்டி டிபாலு (ஆந்திரா) *திருமலை மலைகள் (ஆந்திரா), *வர்கலா (கேரளா)
News September 16, 2025
ரஜினி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்?

‘காலா’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷிக்கு, அவருடன் நீண்ட நாள்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ரசித் சிங்குடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரசித் சிங், நடிப்பு பயிற்சி வழங்குபவராக உள்ளார். இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இணைந்து பங்கேற்றதால், இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் வைரலானது.