News August 22, 2025
Dream 11 கேமுக்கு தடை

ஆன்லைன் கேமிங் மசோதா-2025 நிறைவேறிய நிலையில், Dream 11 கேம் நிறுத்தப்படும் என டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பணம் வைத்து விளையாடும் அனைத்து வகை கேம்களையும் நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. FanCode, DreamSetGo, மற்றும் Dream Game Studios ஆகியவை மட்டும் செயல்படும். 2024-ல் டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈட்டிய ₹9,600 கோடி வருமானத்தில் 90% Dream 11-ல் இருந்தே கிடைத்ததாம்.
Similar News
News March 28, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.வி.பாலமுருகன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ஆத்தூரில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுவார் என EPS அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த டி.வி.பாலமுருகன், அதிமுகவில் இருந்து விலகி, ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.TNElection2026
News March 28, 2026
சொந்த வீடு கட்டணுமா? பணம் தரும் அரசு திட்டம்!

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ₹2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. இந்த மானியம் 3 தவணைகளாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற https://pmaymis.gov.in -ல் விண்ணப்பியுங்கள். பலரது கனவை நிறைவேற்றும் இத்திட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள, SHARE THIS.
News March 28, 2026
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கிய 10 தொகுதிகள் எவையென அடையாளம் காணப்பட்டு, இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது. தேமுதிக விரும்பிய தொகுதிகள் உள்பட 10 தொகுதிகளின் பட்டியலை இன்று மாலை ஸ்டாலின் அறிவிப்பார் என எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். அதேபோல், விசிக, இரு கம்யூ., கட்சிகளின் தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


