News July 21, 2024
டிராவிட்டின் சாதனை முறியடிப்பு

குறைவான டெஸ்ட் இன்னிங்க்ஸ்-களில் 32 சதங்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்தார். மே.இ.தீவுகளுக்கு எதிரான தனது 260ஆவது இன்னிங்க்ஸ்-இல் ஜோ ரூட் 32ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 261 இன்னிங்க்ஸ்-களில் 32 சதங்கள் அடித்த டிராவிட்டின் சாதனை தகர்க்கப்பட்டது. முதல் இரண்டு இடங்களில் ஜெயவர்தனே (235), ஸ்டீவ் வாக் (251) உள்ளனர்.
Similar News
News November 28, 2025
தேர்வு இல்லாமல் மத்திய அரசில் 156 வேலைவாய்ப்பு!

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஃபிட்டர், உள்ளிட்ட 156 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI. மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.8. இங்கே <
News November 28, 2025
லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா?

லோகேஷிடம் கதை கேட்ட அல்லு அர்ஜூன், அக்கதை பிடித்துப்போக ஸ்கிரிப்ட் வேலைகளை உடனே தொடங்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு, தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், ‘கூலி’ பட தோல்விக்கு பிறகு ‘DC’ படத்தில் நடித்து வரும் லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் – அல்லு அர்ஜுன் காம்போ எப்படி இருக்கும்?
News November 28, 2025
கேட்ட வரத்தை தரும் நட்சத்திர தீப வழிபாடு!

திருவோண நட்சத்திரத்திற்கு முன் 24 நிமிடங்கள் மட்டுமே வரும் அபிஜித் நட்சத்திரத்திடம் முழு மனதோடு வேண்டினால், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அகல் விளக்கில் 1 ஸ்பூன் பச்சை பயிரை சேர்த்து, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். கிருஷ்ணரின் படத்திற்கு முன் இந்த தீபத்தை ஏற்றி வைத்து, முழு மனதோடு ஏதாவது ஒரு காரியத்தை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


