News October 6, 2025
திராவிடம் செத்துவிட்டது: சீமான்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட இயக்கத்தை சேர்ந்தவர் யார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழின தலைவர்களின் மொழி புரட்சியை தங்களது லாபத்திற்காக திராவிடர்கள் பயன்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், திராவிடம் செத்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், கடற்கரை எங்களுக்கு கடற்கரை தான்; எவருக்கும் கல்லறை இல்லை; தேர்தலில் NTK முன்னிலை என்ற உடனே தானாகவே கல்லறை இடிக்கப்படும் என்றார்.
Similar News
News October 6, 2025
வீட்டிலிருந்தபடியே வருமானம் வேண்டுமா? இதோ திட்டம்

வீட்டில் இருந்தபடியே மாதம் ₹9,000 வரை வருமானம் ஈட்ட வேண்டுமா? அதற்கு போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். இதில், ₹1 லட்சம் – ₹15 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். ₹15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹9,250 வருமானமாக கிடைக்கும். திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் செலுத்திய ₹15 லட்சம் உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும். SHARE.
News October 6, 2025
தலைமை நீதிபதியை தாக்கியவர் வாக்குமூலம்

SC-யின் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசி தாக்கமுயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை டெல்லி போலீஸ் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, மத உணர்வுகளை பாதிக்கும் விதமாக CJI பேசியதால் தான் இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கஜுராஹோ கோயிலில் துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையின் தலையை மீண்டும் நிறுவக் கோரிய வழக்கில், ’கடவுளிடமே கேளுங்கள்’ என CJI சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 6, 2025
சோனம் வாங்சுக் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை விடுவிக்க கோரி அவரது <<17901661>>மனைவி உச்ச நீதிமன்றத்தில் <<>>வழக்குத் தொடர்ந்திருந்தார். இதில் சோனம் வாங்சுக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், அவர் அவரது தடுப்புக்காவலுக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை என்று வாதிட்டார். இதனையடுத்து சோனம் வாங்சுக்கை கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு SC நோட்டீஸ் அனுப்பியுள்ளது.