News April 29, 2025
திராவிட அரசியலே மத வெறி தான்: எச்.ராஜா விமர்சனம்

வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் என்று எச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுகவில் 2 விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் உளறிக் கொண்டிருக்கிறார். திராவிட அரசியலே மத வெறி தான். முதல்வர் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டே அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையாகியுள்ளது.
Similar News
News September 19, 2025
BREAKING: ரஷ்யாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட கம்சட்கா பகுதியிலேயே கடலுக்கு அடியில் 128 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரங்களில் வசிக்கும் மக்கள் நள்ளிரவிலும் அலறியடித்து வெளியேறினர்.
News September 19, 2025
வயிற்று சதை குறைய இந்த யோகா பண்ணுங்க!

பவனமுக்தாசனம் செய்வதால் தேவையற்ற வாயுக்களை நீங்கி, செரிமானம் சீராகிறது. வயிறு, இடுப்பு சதைகள் குறைகின்றன.
*இதை செய்ய முதலில் படுத்துக் கொள்ளவும் *அடுத்து 2 கால்களையும் மடித்து, தொடைகளை மார்போடு சேர்த்து வைத்து, கைகளால் கால்களை இறுக்கமாக கட்டியணைக்கவும்.
*பின்னர் தலையை உயர்த்தி, தாடையால் கால் முட்டிகளை தொட முயற்சிக்கவும். இந்த பதிவை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 19, 2025
ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

மறைந்த ரோபோ சங்கருக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன், டி.ராஜேந்தர், இயக்குநர் எழில், வெங்கட் பிரபு, நடிகர் சாந்தனு, தாடி பாலாஜி, நடிகை வரலட்சுமி என பல சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், சரத்குமார், அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் கனத்த இதயத்துடன் வேதனை தெரிவித்துள்ளனர்.