News April 29, 2025
இந்தியன் 2 போல் திராவிட மாடல் 2.0 தோல்வி

இன்றோடு முடிவுற்ற TN பேரவைக் கூட்டத்தொடரில், 2026-ல் திராவிட மாடல் Part 2 தொடரும் என CM ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து பேசிய ADMK உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், TN-ல் Part 2 எப்போதும் தோல்விதான், இந்தியன் 2 கூட தோல்வியடைந்து விட்டது எனக் கூறினார். DMK கூட்டணியில் அங்கம் வகிக்கும் MNM தலைவர் கமல்ஹாசன் நடித்த இப்படம் படுதோல்வியடைந்தது. INDIA கூட்டணியையே ஆர்.பி. கூறியதாக ADMK-வினர் சிலாகிக்கின்றனர்.
Similar News
News April 29, 2025
ஷாலினியை புகழ்ந்த அஜித்

33 வருடங்களாக என் வேலையை நேசித்து செய்கிறேன், என்னுடைய வாழ்க்கையை எளிதாக வாழ விரும்புகிறேன் என்று நடிகர் அஜித் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். என்னுடைய மிகப்பெரிய பலம் எனது குடும்பத்தாரும், எனது மனைவி, குழந்தைகளும் தான். குறிப்பாக எனது மனைவி ஷாலினி என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்த அவருக்குதான், என்னுடைய சாதனைகள் எல்லாம் சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
மே 1 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News April 29, 2025
அரசியல் பிரமுகரின் மகள் சடலமாக மீட்பு

பஞ்சாப் AAP பிரமுகர் தேவேந்திர் ஷைனியின் மகள் வன்ஷிகா ஷைனி (21), கனடாவின் ஒட்டாவா பீச் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2023-ல் கனடா சென்ற அவர், கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். ஏப்.25-ல் வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறிச் சென்றதாக சக தோழிகள் கூறியுள்ளனர். தனது மகளின் சடலத்தை தாயகம் கொண்டுவர மத்திய அரசுக்கு தேவேந்திர் கோரிக்கை விடுத்துள்ளார்.