News August 14, 2024
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாடுகிறது: ஆளுநர்

நாட்டில் 1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் நீங்கவில்லை என, ஆளுநர் ரவி கூறியுள்ளார். சென்னை IIT நிகழ்ச்சியில் பேசிய அவர், பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிப்பதாகவும், அதில் ஒன்று திராவிட சித்தாந்தம் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை எனவும் அவர் சாடினார். மொழி, இருப்பிடம் மூலம், மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்றும் குறை கூறினார்.
Similar News
News January 9, 2026
EPS-க்கு ஏமாற்றமே மிஞ்சும்: அருள்

பாமகவுடன் (அன்புமணி) அதிமுக கூட்டணி வைத்ததை ராமதாஸ் ஆதரவு MLA அருள் கடுமையாக விமர்சித்துள்ளார். அன்புமணியுடன் கூட்டணி வைத்தவர் (EPS) ஏமாந்து போவார் எனக் கூறிய அவர், சில சதிகாரர்கள் பாமகவை பலவீனப்படுத்தியுள்ளனர் என குற்றம் சாட்டினார். மேலும், இந்த சதியில் இருந்து மீண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எழுச்சி பெறுவோம் என்றும் ராமதாஸ் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியில் அமரும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
நகைக் கடன்.. வந்தாச்சு புதிய அப்டேட்

2026 ஜனவரி முதல், நகைக் கடன் வழங்குவதில் RBI-ன் புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நகையை அடகு வைக்கும்போது, கடந்த 30 நாள்களின் சராசரி விலை (அ) நேற்றைய இறுதி விலை இந்த இரண்டில் எது குறைவோ அதன் அடிப்படையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். இந்த கணக்கீடு காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் கடன் வரம்பில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. SHARE IT.
News January 9, 2026
இனியன் சம்பத் காலமானார்

‘சொல்லின் செல்வர்’ ஈவிகே சம்பத்தின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான இனியன் சம்பத் காலமானார். திமுக, காங்., அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்த இனியன் சம்பத், 2016-ல் ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


