News October 18, 2025
திராவிடத்திற்கும் EPS-க்கும் சம்பந்தமில்லை: சிவசங்கர்

திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாது என கூறிய EPS, திராவிட மாடலுக்கு நான் தான் உதாரணம் என்று சொல்வது கேவலமான கூத்து என SS சிவசங்கர் விமர்சித்துள்ளார். EPS-ஐ பொறுத்தவரை கட்சி, கொள்கை என்று எதுவுமே கிடையாது, அமித்ஷா திமுக என்ற நிலைக்கு அதிமுக சென்றுவிட்டதாகவும் சாடினார். அதிமுக எனும் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தும் EPS-க்கும் திராவிடத்துக்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டார்.
Similar News
News March 12, 2026
கிருஷ்ணகிரி மக்களே ரூ.5000 வேண்டுமா!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
+2 மாணவி வன்கொடுமை.. கனிமொழி கொடுத்த ரியாக்சன்!

தூத்துக்குடியில் பள்ளி <<19356260>>மாணவி பாலியல் வன்கொடுமை<<>> செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
இஸ்ரேலை அழிப்போம்: ஈரான்

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் ரஹீம் சஃபாவி, இஸ்ரேலை நிச்சயம் அழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளார். மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஈரானும் ஒரே சமயத்தில் நிலைத்திருக்க சாத்தியமில்லை என்றும், இரண்டில் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், டிரம்ப் மோசமான மற்றும் முட்டாள்தனமான அமெரிக்க அதிபர் என்றும் விமர்சித்தார்.


