News March 18, 2024
நாமக்கல் மாவட்டத்தில் அதிரடி மாற்றம்

நாமக்கல் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தனராசு பதவி உயர்வு பெற்று ஏடிஎஸ்பி ஆக நாமக்கல் மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த எஸ். ஆனந்தராஜ் நாமக்கல் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல்லில் 1946 முதல் இதுவரை 59 பேர் டிஎஸ்பியாக பணியாற்றிய வந்தனர். இந்நிலையில் 60 வது டிஎஸ்பியாக ஆனந்தராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
Similar News
News December 5, 2025
நாமக்கல்: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

நாமக்கல் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ்: https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 5, 2025
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற கண்டக்டருக்கு நேர்ந்த நிலைமை!

சேந்தமங்கலம் ஜங்களாபுரம் கணேசன் (65), அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் சேலத்தில் உறவினர் இறப்புக்கு சென்றபின் டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆண்டகலூர்கேட் மேம்பாலத்தில் தடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். புகாரின் பேரில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் நுகா்வோா்கள் நலன்கருதி அனைத்துத் துறையின் முதல்நிலை அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் பங்கேற்கும் காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் டிச.11 மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நுகா்வோா்கள் கலந்துகொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.


