News March 2, 2025

வசூல் வேட்டையாடும் ‘டிராகன்’

image

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ₹100 கோடி வசூலித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், முதல் 3 நாளில் ₹50 Cr வசூல் செய்திருந்த நிலையில், அடுத்த 9 நாட்களில் ₹100 Cr கோடியை தாண்டியது. இளம் நடிகர் ஒருவர் நடித்த முதல் 2 படங்களும் ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்வது இதுவே முதல்முறை.

Similar News

News March 12, 2026

TN புதிய கவர்னர் இன்று பதவியேற்பு!

image

தமிழ்நாட்டின் புதிய(பொறுப்பு) கவர்னராக கேரள மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர அர்லேகர் இன்று பதவியேற்க உள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

News March 12, 2026

BREAKING: தமிழகத்தில் அடுத்த பிரச்னை வெடித்தது

image

தூத்துக்குடியில் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற <<19356260>>+2 மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவியை அடையாறு பகுதியில் காரில் கடத்தி ஒரு கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விவகாரம் TN-ல் அடுத்த பிரச்னையாக வெடித்துள்ளது.

News March 12, 2026

பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

image

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!