News February 12, 2025

‘டிராகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

image

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Similar News

News February 12, 2025

மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும்: டிரம்ப் வார்னிங்

image

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக் கைதிகளை வரும் 15ஆம் தேதி பகல் 12 மணிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும். மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும். காசாவை நாங்கள் வாங்கப் போவதில்லை. எடுத்துக்கொள்ள போகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News February 12, 2025

பயங்கரவாதம் இல்லனா விளையாடலாம்: தவான்

image

பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் டீம் விளையாடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தற்போது, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாஜி வீரர் ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதம் ஓயாத வரை அங்கு கிரிக்கெட் விளையாடக்கூடாது என கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு கருதி அரசின் முடிவுக்கு நிச்சயம் ஆதரவு தர வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார் தவான்.

News February 12, 2025

மப்பு ஓவரா… லீவு கொடுக்கும் கம்பெனி!

image

வார இறுதியிலோ, ஏதோ ஒரு பார்ட்டியாலோ ஹேங்-ஓவராகி ஆபீஸ் போக கஷ்டப்படுறீங்களா? ஒரு நிறுவனம் இதற்காக லீவ் கொடுக்கிறார்கள். இதில் கூடுதல் ஸ்பெஷல் Weekendல் அவர்களே மதுவும் கொடுத்து அனுப்புகிறார்கள். உடனே ஜாயின் பண்ணனும் என நினைப்பவர்கள் ஜப்பான் கிளம்புங்க. அங்கு Trust ring என்ற நிறுவனம் இந்த ஆஃபரை அளிக்கிறது. இது வேலை செய்பவர்கள், தங்களை ரீசார்ஜ் செய்து கொள்ள உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.

error: Content is protected !!