News February 24, 2025
3 நாளில் ₹50 கோடியை வசூலித்த ‘டிராகன்’

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் 3 நாளில் ₹50 Cr வசூல் செய்துள்ளது. ஓபனிங் வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் ₹24.5 Cr, வெளிமாநிலங்களில் ₹10.62Cr, வெளிநாடுகளில் ₹14.7 கோடியை வசூலித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த வாரம் ₹100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 24, 2025
சாமுத்திரிகா லட்சணம்: மச்சங்களும் அர்த்தங்களும்

*இடது தோளில்- பிடிவாத குணம் உடையவர். *முழங்கையில்- அமைதியின்மை. *வலது கன்னத்தில் – ஆதிக்கம் செலுத்தும் குணமுடையவர். *இடது கன்னத்தில்- முன்கோபத்தின் அடையாளம், சிந்தனையாளர். *காதின் மேல் அல்லது கீழ்ப்பகுதியில்- அறிவாளி. *நாக்கில் – உடல்நலம் மற்றும் பேச்சு தொடர்பான பிரச்னைகளில் சிக்குவீர்கள். *கழுத்தின் முன்பகுதி- அதிர்ஷ்டசாலி, பேச்சுத்திறமை, *கழுத்தின் பின்பகுதி- ஆக்ரோஷம்.
News February 24, 2025
தமிழ் புத்தாண்டு தினத்தில் ‘ஜனநாயகன்’ அப்டேட்

விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் அடுத்த அப்டேட்டை, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் விஜய் தமிழக அரசியலில் குதித்ததால், இது அவருடைய கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் பாபி தியோல், GVM, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது.
News February 24, 2025
ஜெ.,வை புகழ்ந்த மோடி!

ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு, PM மோடி தனது X பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், TNன் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெ., கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டதாக புகழ்ந்துள்ளார். எப்போதும் அவர் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்ததாக நினைவுகூர்ந்ததுடன், அவருடன் உரையாடும் வாய்ப்பை பெற்றது தனது கௌரவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.