News June 24, 2024
மருத்துவர் குகானந்தம் காலமானார்

கொரோனா காலத்தில் தமிழக அரசின் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு குழுவின் ஆலோசகராக இருந்தவர் மருத்துவர் குகானந்தம். 68 வயதான இவர், நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். டெங்கு நோய் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரிவிலும், யுனிசெப் அமைப்பிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 17, 2025
BREAKING: சங்கர் கணேஷ் ஹாஸ்பிடலில் அனுமதி

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான சங்கர் கணேஷ்(81) மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் பாடல் பாட புறப்பட்ட அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ள சங்கர் கணேஷ், குருசாமி, பூவெல்லாம் கேட்டுப்பார், நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
News September 17, 2025
உங்க போனின் ஹெல்த்தை கண்டீசனை அறிய..

போன் பிராண்டுகளின் ரகசிய குறியீடுகள்:
•Google Pixel: *#*#7287#*#*
•Samsung: *#0*#
•OnePlus: *#*#4636#*#*
•RealMe: *#899#
•Oppo: *#800# (or) *#*#800#*#*
•Vivo: *#*#4636#*#*
•Xiaomi: *#*#64663#*#* (or) *#*#6484#*#*
•Motorola: *#*#2486#*#*
இந்த முக்கியமான செய்தியை, உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 17, 2025
மகனுடன் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ்: TTV

அமித்ஷாவை சந்தித்தபின் கர்சீப்பை கொண்டு முகத்தை மூடியவாறு EPS காரில் செல்லும் PHOTO வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய TTV, வீரவசனம் எல்லாம் பேசிவிட்டு தற்போது அமித்ஷாவை தனது மகனுடன் சந்தித்த EPS, முகத்தை மூடிக்கொண்டு ஓடிவருவதை யாராவது பார்த்திருக்க முடியுமா?, EPS அடிக்கும் கூத்துகளை எல்லாம் ராஜதந்திரம் என சிலர் கூறுகின்றனர். இனியும், தமிழக மக்களை அவரால் ஏமாற்ற முடியாது எனத் தெரிவித்தார்.