News March 19, 2024
சூர்யகுமார் விளையாடுவதில் சந்தேகம்

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக 3 வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 22, 2025
தி.மலை: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

திருவண்ணாமலை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 22, 2025
USA-ன் திட்டம் அமைதிக்கான அஸ்திவாரம்: புடின்

அமெரிக்காவின் <<18355051>>போர் நிறுத்த திட்டம்<<>>, உக்ரைனில் அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்றாலும், 28 நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அமைதி திட்டத்தை உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மாதம் ₹3,000 கொடுக்கும் அரசு.. உடனே அப்ளை பண்ணுங்க

வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாய கூலி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 ஓய்வூதியம் பெற முடியும். இதற்கு மத்திய அரசின் <


