News March 16, 2025

மோகன்லால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

image

2019ல் இயக்குநராக அவதாரம் எடுத்த நடிகர் பிரித்விராஜ், மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை எடுத்தார். அரசியல் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான அப்படத்தை மலையாளம் மட்டுமல்லாமல், தமிழிலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதன் 2ஆம் பாகமான ‘எம்புரான்’ வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் எம்புரானுக்கு முன், மீண்டும் ஒருமுறை பார்க்கும் வகையில் வரும் 20ஆம் தேதி லூசிபர் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

Similar News

News March 16, 2025

TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. அவகாசம் நீட்டிப்பு

image

TMB வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அந்த வங்கியின் கிளைகளில் 124 சீனியர் கஸ்டமர் சர்வீஸ் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 16, 2025

போஸ்ட் ஆபீசிஸ் 21,413 வேலை.. விண்ணப்ப நிலை அறிய வசதி

image

போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள 21,413 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு மார்ச் 3 வரை நடைபெற்றது. இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா, இல்லையா என்பதை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <>https://indiapostgdsonline.gov.in/<<>> சென்று Apply Online பகுதிக்கு சென்று, Application Status என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திறக்கும் பக்கத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை உள்ளிட்டு விண்ணப்ப நிலவரம் அறியலாம்.

News March 16, 2025

பெ.ம.க. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

image

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் (பெ.ம.க.) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து அக்கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் நீக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ்.பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ். தேவராஜ் ஆகியோர் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் 2 பேரும் நீக்கப்படுவதாகவும் என்.ஆர். தனபாலன் கூறியுள்ளார்.

error: Content is protected !!