News March 17, 2024
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு இபிஎஸ் தான் காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்றும் இல்லையென்றால், அதனை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முன்னதாக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி கோரிய புகழேந்தியின் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை அணுக உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 12, 2025
குடியுரிமைக்காக USA-ல் பிரசவம்: இனி ‘நோ’ விசா!

USA-வில், அங்கே பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் உள்ளது. எனவே, பிரசவத்தின் போது வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் USA செல்வதால், டிரம்ப் இதை முடிவுக்கு கொண்டுவர உத்தரவிட்டார். இதன் மீது, USA SC கோர்ட் முடிவெடுக்க உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் USA தூதரகம், குடியுரிமைக்காக குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், நிராகரிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
News December 12, 2025
FLASH: வெள்ளி விலை ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

<<18540317>>தங்கமும்<<>>, வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வருகின்றன. இன்று(டிச.12) ஒரே நாளில் பார் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்துள்ளது. இதனால், 1 கிராம் ₹215-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இந்திய சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
News December 12, 2025
அடுத்தமுறை டாக்டர் Prescription பார்த்தால், இத கவனியுங்க!

டாக்டர் Prescription கொடுத்தால், அதிலிருக்கும் பல Short form வார்த்தைகள் என்னவென்றே புரியாது. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம்.. இவற்றை ஞாபகம் வெச்சிக்கோங்க: ◆Dx- Diagnosis (நோய் கண்டறிதல்) ◆Rx- Prescription (மருந்துக்குறிப்பு) ◆Tx- Treatment (சிகிச்சை) ◆Sx- Surgery (அறுவை சிகிச்சை) ◆Hx- History (மருத்துவ வரலாறு) ◆Fx- fracture (எலும்பு முறிவு). இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.


