News August 17, 2025
தீபாவளிக்கு இரட்டை போனஸ் வெயிட்டிங்: PM மோடி

தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருப்பதாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் PM மோடி கூறியுள்ளார். தன்னை பொறுத்தவரை சீர்திருத்தம் என்பது நல்லாட்சியை விரிவுபடுத்தல் எனக் கூறிய அவர், அடுத்த தலைமுறைக்கான சீர்த்திருத்தமாக GST-யில் மாற்றம் செய்யப்படுகிறது என்றார். GST வரி குறைப்பை தாண்டி மத்திய அரசு மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. என்னவா இருக்கும்?
Similar News
News March 4, 2026
ஈரானின் உயர் தலைவரானார் கமேனியின் மகன்

போரில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானின் புதிய உயர் தலைவராக முஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. இவர் கமேனியின் 2-வது மூத்த மகன் ஆவார். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கொடுத்த அழுத்தத்தினால், ஷியா மதகுருக்கள் இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஈரானில் பரம்பரை ஆட்சி முறை எதிர்க்கப்படும் நிலையில், முஜ்தபாவின் தேர்வு சர்ச்சையாகியுள்ளது.
News March 4, 2026
முதல் அரையிறுதி : NZ Vs SA பலப்பரீட்சை

டி20 WC முதலாவது அரையிறுதி போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்கா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து, SA-வுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு? உங்கள் கணிப்பு
News March 4, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 4, மாசி 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


