News January 3, 2025
இன்று முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

நடப்பாண்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹249.76 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை TN அரசு வழங்க உள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதில், பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
Similar News
News November 5, 2025
RAIN ALERT: நாளை மிக கவனம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றிரவு கனமழை பெய்தது. இந்நிலையில், நாளை(நவ.5) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாளும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்!
News November 5, 2025
நகை கடன்… முக்கிய அறிவிப்பு

2026 ஏப்.1 முதல், தங்கத்தைபோல் வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என RBI அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் பண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. நீங்கள் ₹2.5 லட்சம் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85% கடன் கிடைக்கும். ₹5 லட்சம் வரை 80% வரையும், அதற்கு மேல் 75% வரையும் கடன் பெறலாம்.
News November 5, 2025
உயர்சாதியினர் கைகளில் இந்திய ராணுவம்: ராகுல்

இந்திய ராணுவம், நாட்டின் மக்கள் தொகையில் 10% உள்ள உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், கார்ப்பரேட், அரசு துறை பதவிகள், நீதித்துறையிலும் உயர் சாதியினரே கோலோச்சுவதாகவும், மீதமுள்ள 90% மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


