News February 13, 2025

இன்று முதல் வீடு- வீடாக தொழுநோய் பரிசோதனை

image

TN முழுவதும் இன்று முதல் வீடுதோறும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. முன்கூட்டியே தொழு நோயாளிகளை கண்டறியவும், தொழு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக, இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வீடு- வீடாக மக்களிடம் பரிசோதனை நடத்த பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Similar News

News February 13, 2025

எம்ஜிஆர் வழியில் விஜய்?

image

புதிதாக கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தெளிவான முறையில் கட்சியின் கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறார். மிக முக்கியமாக, கட்சியின் விதிகளை வகுத்துள்ளார். <<15452112>>அதிமுகவின் By-Lawவை எம்ஜிஆர் எப்படி வகுத்தாரோ<<>>, அதே பாணியை விஜய்யும் கடைப்பிடித்திருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், கட்சித் தொண்டர்களால் மட்டுமே தலைவரை தேர்வு செய்வது என்ற விதிகளை வகுத்திருக்கிறார் விஜய்.

News February 13, 2025

விதி மாற்றத்தால் விபரீதமா?

image

அதிமுகவின் BY-LAW என்ற உட்கட்சி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விதி தற்போது இபிஎஸ்-க்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சித் தொண்டர்களிடமே இருக்கும் என விதி வகுக்கப்பட்டிருந்தது. அதில் திருத்தம் செய்து நிர்வாகிகளே தேர்ந்தெடுக்கலாம் என்ற விதியை புகுத்தியது தான் இபிஎஸ்-க்கு பிரச்னையாகி இருக்கிறது.

News February 13, 2025

KISS DAY: ஓட்டுக்கு முத்தம் கொடுத்த வரலாறு தெரியுமா?

image

* கிபி 300-ல் ரோம் நகரில் மாலையில் வேலைமுடிந்து வீடு திரும்பும் கணவர்களை, மனைவியர் உதட்டில் முத்தமிடுவது வழக்கமாம். மது அருந்தி இருக்கிறாரா என அறிய உருவான அந்த பழக்கம், காலப்போக்கில் மேற்கு கலாசாரங்களில் ஒன்றாகவே ஆனது. * 1784-ல் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் ஜார்ஜியானா என்ற அரசகுடிப் பெண், தேர்தலில் போட்டியிட்ட நண்பருக்கு ஆதரவாக ஓட்டுகள் பெற, முத்தத்தை லஞ்சமாக கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

error: Content is protected !!