News April 9, 2024

வாக்குறுதியில் நியாயம் வேண்டாமா?

image

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி மோசடி என ராமதாஸ் விமர்சித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறி வந்த காங்கிரஸ், தற்போது சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது. இது மோசடி என விமர்சித்துள்ள அவர், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லையென்றாலும் வாக்குறுதியில் நியாயம் வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News September 4, 2025

பிரேமலதா எடுத்த முக்கிய முடிவு.. திமுக தரப்பு ஆதரவு

image

விஜயகாந்தின் Ex MLA பென்ஷன் தொகையான ₹15,000 கேட்டு பிரேமலதா விண்ணப்பித்துள்ளார். பல கோடி சொத்து உள்ள உங்களுக்கு எதற்கு இந்த பென்ஷன் என சோசியல் மீடியாவில் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், திமுக Ex MP அப்துல்லா, பணம் என்பதை தாண்டி, தன் கணவர் தன்னை தவிக்கவிட்டு போகவில்லை என ஒரு மனைவியாக அவரை இந்த பென்ஷன் உணர வைக்கும் எனவும், இது வெறும் பணத்திற்காக அல்ல என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News September 4, 2025

‘கூலி’ OTT ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

ரஜினி நடித்த ‘கூலி’ படம் வரும் செப்.11ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் காணலாம். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் இப்படத்தில், சில BTS காட்சிகளும் இணைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தியேட்டரில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் படம் பார்த்துட்டீங்களா?

News September 4, 2025

தோனி IPL-ல் இருந்து ஓய்வா? வைரல் செய்தி!

image

கடந்த சில வருடங்களாகவே, தோனி எப்போது IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே பெரும் விவாத பொருளாக உள்ளது. 2025 சீசனில் பாதியில் இருந்து அணிக்கு கேப்டனான அவர், 2026 சீசனுக்கு முன்பாக ஓய்வு பெற்று விடுவார் எனப்பட்டது. ஆனால், 2026 சீசனிலும் கேப்டனாக விளையாடுவார் என்ற செய்தி சோஷியல் மீடியாவை ஆக்ரமித்துள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற போதிலும், ரசிகர்கள் இப்போதே குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!