News October 25, 2025
TTV பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்: RB உதயகுமார்

CM வேட்பாளராக EPS-ஐ விஜய் ஏற்க மாட்டார், EPS தான் தவெகவை நாடிச் செல்ல வேண்டாம் என்று TTV தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், TTV குறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று RB உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். ஊடக வெளிச்சத்துக்காகவே TTV இவ்வாறு பேசி வருவதாகவும், அவரைப் பற்றி அதிமுகவினர் பேச வேண்டாம் என்று EPS அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 14, 2026
பெயர்களை நீக்கவும் அதிகாரம் உள்ளது: ECI

SIR-ஐ எதிர்த்து SC-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஒருநபரின் குடியுரிமையை தீர்மானிக்கும் வரை, அவரது வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியுமா என்று SC, கேள்வி எழுப்பியது. இதற்கு ECI, சந்தேகத்திற்குரிய சந்தர்ப்பத்தில் குடியுரிமை குறித்து விசாரிக்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கவும் தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று பதிலளித்துள்ளது.
News January 14, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

₹1,000 மகளிர் உரிமைத் தொகை தற்போது தகுதியான மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பதை அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, அரசு & தனியார் நிறுவனங்களில் ஊதியம் பெறுபவராக இருக்கக்கூடாது. எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது. பள்ளி, கல்லூரி மாணவிகளாக இருக்கக்கூடாது. உரிமைத்தொகை பெறுவோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.
News January 14, 2026
மதுப் பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஷாக்

திருவள்ளுவர் தினமான ஜன.16-ல் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக்குகளையும் மூட தமிழக அரசும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், ஜன.16, 26 (குடியரசு தினம்), பிப்.1 (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் ஷாக்கில் உள்ளனர்.


