News August 19, 2024
இவர்களுக்காக பணத்தை வீணடிக்காதீர்கள்: கவாஸ்கர்

IPL தொடரில் பல அணிகளும் உள்ளூர் வீரர்களை அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்து பணத்தை வீணடிப்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், முதல் தர போட்டியில் வலுவான எதிரணியுடன் மோதும்போது சிரமப்படுவதாக தெரிவித்தார். கடந்த IPL தொடரில் உள்ளூர் வீரரான ரிஸ்வியை CSK ₹8.4 கோடிக்கு வாங்கியது. அவர் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
Similar News
News March 22, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

புதுச்சேரி திமுக – காங்., கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக – காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியின் வில்லியனூர், நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், மாஹே, காரைக்கால் வடக்கு, திருநள்ளாறில் தனித்து போட்டியிடுவதாக IUML மாநில செயலாளர் முகமது அலி அறிவித்துள்ளார்.
News March 22, 2026
ஆட்சியில் பங்கு கேட்கும் புதுவை அதிமுக

புதுவை NDA கூட்டணியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பளம் & உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ரங்கசாமி மீண்டும் CM ஆவதற்கு அதிமுக துணை நிற்கும் என்ற அவர், நிச்சயமாக ஆட்சியில் பங்கு கேட்போம்; தர்மத்திற்கா நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம் என்றும் கேள்வி எழுப்பினார்.
News March 22, 2026
வாழை விலை தலைகீழாக சரிவு.. விவசாயிகள் கவலை!

TN-ல் வாழைப்பழம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிலோ ₹55 ஆக இருந்த ஏலக்கி ₹30, பூவன் ₹25லிருந்து ₹11 என சரிந்துள்ளது. அதேபோல், 1 கிலோ கற்பூரவாழை ₹13, செவ்வாழை ₹30, நேந்திரன் ₹12-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பு, ஏற்றுமதி சரிவே இதற்கு காரணம் எனக் கூறும் வியாபாரிகள் நாளொன்றுக்கு சுமார் ₹12 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.


