News October 6, 2025
இது தெரியாம ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணாதீங்க!

பர்சனல் பொருளாகிவிட்ட போனை யாராவது ஒருவருக்கு யூஸ் பண்ண கொடுத்தால், அவர்கள் உங்க போனில் என்ன பண்ணாங்க என தெரிஞ்சிக்க இந்த சிம்பிள் ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க. போனின் டயல் பேடில் ‘*#*#4636#*#*’ என டைப் பண்ணுங்க. வரும் 3 ஆப்ஷன்களில் Usage Statistics-ஐ செலக்ட் பண்ணி, ‘Sort by last time used’ என்பதை கிளிக் செய்யுங்க. குறிப்பிட்ட APP-ஐ எவ்வளவு நேரம் யூஸ் பண்ணாங்க என்பது தெளிவாக வந்துவிடும். SHARE IT.
Similar News
News October 6, 2025
இதெல்லாம் குற்றமா? தெரிஞ்சுக்கோங்க!

சில நாடுகளில் வித்தியாசமான சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றில் சில சட்டங்கள், ‘என்னடா இது’ என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. சில சட்டங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களை ஆச்சரியப்பட வைத்த சட்டம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. இதேபோல், நீங்கள் கேள்விப்பட்ட விநோதமான சட்டம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்க.
News October 6, 2025
தீபாவளி விடுமுறை.. அக்.16 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி பயணிக்க 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்.16-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு சென்னையில் இருந்து கூடுதலாக 14,268 சிறப்பு பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 6,110 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும், தீபாவளி முடிந்து மீண்டும் ஊர் திரும்ப 15,129 பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News October 6, 2025
BREAKING: பிஹார் தேர்தல் தேதி அறிவிப்பு

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது. அதன்படி வரும் நவ.6 மற்றும் நவ.11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 121, 2-ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. நவ.16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.