News September 21, 2024
அவருடன் என்னை சேர்த்து பேசாதீர்கள்: ஜெயம் ரவி

தனது மனைவி ஆர்த்தியை பிரியப் போவதாக ஜெயம் ரவி அறிவித்திருந்தார். இதனிடையே, பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதால்தான் மனைவியை அவர் பிரிவதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஜெயம் ரவி, “பாடகி கெனிஷாவுடன் என்னை இணைத்து பேசாதீர்கள். அது தவறு. அவருடன் இணைந்து ஆன்மீக மையம் ஒன்றை தொடங்க இருந்தேன். அதை தடுப்பதற்காக சிலர் இப்படி பேசுகிறார்கள்” எனக் கூறினார்.
Similar News
News August 22, 2025
சூர்ஜித்துடன் செல்போனில் பேசியவர்களுக்கு சமன்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின்(27) என்பவர் கடந்த 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் அவர்கள் தந்தை எஸ்ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வரும் நிலையில் கொலை செய்த நாள் அன்று சுர்ஜித் செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை சிபிசிஐடி போலீசார் கண்காணித்தனர். அதன்படி அவரது 2 உறவினர் மற்றும் நண்பரை விசாரிக்க சம்மன் அனுப்பினர்.
News August 22, 2025
உங்க செல்போனில் உடனே இதை செக் பண்ணுங்க

பல போன்களின் Calling Interface மாற்றப்பட்டுள்ளது. அதாவது, முன்னர் வரும் அழைப்பை Attend அல்லது Reject பண்ண, மேலே அல்லது கீழே Swipe செய்வோம். இது தற்போது, இடது- வலது புறமாக Swipe செய்யும் வகையில் மாறியுள்ளது. Realme, Oneplus, Moto, Oppo, Vivo போன்ற போன்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயனாளர்கள் வேண்டுமென்றால், பழைய படி மேலே- கீழே Swipe செய்யும் வகையிலும் மாற்றிக் கொள்ளலாம்.
News August 22, 2025
அவதார புருஷனா விஜய்? RB உதயகுமார் சாடல்

அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதன் தொண்டர்கள் வேதனையுடன் இருப்பதாக விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே விஜய், அதிமுகவை விமர்சித்திருக்கலாம் என RB உதயகுமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்வதாக கடுமையாக சாடியுள்ளார். மேலும், அதிமுக EPS தலைமையில் தான் செயல்படுகிறது என்றார்.