News September 11, 2025

WhatsApp-ல் இத பேசிடாதீங்க; அப்புறம் ஜெயில் தான்

image

நாம் அன்றாடம் பயன்படுத்தும் WhatsApp-ல் சில விஷயங்களை பேசினால் நீங்கள் கைது கூட செய்யப்படலாம். ➤சட்டத்துக்கு புறம்பான விஷயங்களை பேச வேண்டாம் ➤வெறுப்பு பேச்சு/அவதூறு கருத்துகளை பகிரக்கூடாது ➤மற்றவர்களின் படைப்பை உங்களுடையது என Claim பண்ணாதீங்க ➤பாலியல் தொந்தரவு கொடுக்க வேண்டாம். இந்த விஷயங்களை WhatsApp-ல் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் செய்யாமல் இருங்கள். SHARE.

Similar News

News September 11, 2025

BREAKING: கவர்னர் ஆகிறாரா H.ராஜா?

image

சி.பி.ஆர் துணை ஜனாதிபதியாக தேர்வானதை அடுத்து, அவர் வகித்த கவர்னர் பதவி (மகாராஷ்டிரா) கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஆருக்கு பதில் மீண்டும் ஒரு தமிழரை மகாராஷ்டிரா கவர்னராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இந்த ரேஸில் <<17440874>>H.ராஜா<<>>, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், H.ராஜா கவர்னராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News September 11, 2025

அதிமுகவின் பிரச்னைகளுக்கு பாஜகதான் காரணம்: திருமா

image

அதிமுகவும், அதன் தலைவர்களும் சுதந்திரமாக செயல்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு முழு காரணம் பாஜகதான் என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் கூறியுள்ளார். பாஜக குறித்து தெரிந்துகொண்டு, அதிமுக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டும் கட்சியை காப்பாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திருமாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

News September 11, 2025

ராஜினாமா செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்

image

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்ரா மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை (செப்.12) அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே குஜராத் மாநில கவர்னரான ஆச்சார்யா தேவ்ரத், மகாராஷ்டிரா கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!