News October 7, 2025
கரூர் சம்பவத்தை தினமும் பேசாதீங்க: கமல்ஹாசன்

கரூர் உயிரிழப்பு என்பது சோகம் தான், ஆனால் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் சோகம் அகலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோவில் சிகிச்சையில் உள்ள ராமதாஸ், வைகோ ஆகியோரிடம் உடல்நலம் விசாரித்த கமல், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரூர் சம்பவம் பற்றி தினமும் பேச வேண்டாம் என்ற அவர், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதில் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார்.
Similar News
News October 7, 2025
பிஹாரில் NDA கூட்டணியில் விரிசலா?

பிஹாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், NDA-வில் சீட் ஷேரிங் முடிந்தபாடில்லை. சிராக் பாஸ்வானின் LJP (Ram Vilas) 40 சீட்கள் கேட்க, 25 தான் பைனல் என BJP கைவிரித்துவிட்டது. இதனால், பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்தால் என்னவென்று சிராக் நினைக்கிறாராம். ம.அமைச்சரான சிராக்கிற்கு CM பதவி மீது ஒரு கண் இருப்பதாக கூறப்படும் நிலையில், நடப்பதை எதிர் தரப்பான ’மகாகத்பந்தன்’ உன்னிப்பாக கவனித்து வருகிறது.
News October 7, 2025
செரிமான பிரச்னையா? இதை ட்ரை பண்ணுங்க

செரிமானம் சரியாக இருந்தாலே உடலில் மற்ற செயல்பாடுகள் பாதிப்படையாமல் சீராக இருக்கும். தினமும் சில எளிய பழக்கங்கள் மூலம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுபோன்று வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 7, 2025
நாளை முதல் Googlepay, Phonepe-ல் கிடையாது!

Googlepay, Phonepe உள்ளிட்ட பணபரிமாற்ற செயலிகளில் பணம் அனுப்பும்போது PIN உள்ளிடும் வசதியை நீக்க NPCL முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக, FINGER PRINTS, FACE RECOGNITION வசதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பணம் அனுப்பும்போது பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். SHARE IT.