News October 6, 2025
இன்றிரவு 12 மணி வரை தூங்காதீங்க

கடந்த மாதம் கிரகணத்தின் போது ரத்த சிவப்பில் BLOOD MOON பார்த்தோம். இன்று அதே நிலவை, SUPER MOON ஆகப் பார்க்கப் போகிறோம். பூமிக்கு மிக நெருக்கமாக நிலா வருவதால், வழக்கத்தை விட 14% பெரிதாக, 30% கூடுதல் பிரகாசத்துடன் இன்றும் நாளையும் நம் வானத்தில் பிரகாசிக்கும். இரவு 10 மணி முதல் 12 மணி வரை இதனை கண்டு ரசிக்கலாம். இந்த சூப்பர் மூனை இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் காண முடியும். SHARE IT.
Similar News
News October 6, 2025
விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுக்காது: திருமாவளவன்

எந்த ஒரு தலைவரும், கரூர் துயரம் போல நடக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வது கிடையாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பாஜக தலையிட்டு உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News October 6, 2025
NO COST EMI: லாபமா? நஷ்டமா?

பண்டிகை சீசன் வந்தாலே ஆன்லைன் முழுக்க ஆஃபர் மயம் தான். அதிலும் NO COST EMI என்பதை பலரும் சிறந்த ஆஃபராக பார்க்கின்றனர். உண்மை என்ன தெரியுமா? நீங்கள் மொத்தமாகவோ, முன்பணம் கட்டியோ வாங்கினால், உங்களுக்கு ஆரம்பத்திலேயே கொஞ்சம் டிஸ்கவுன்ட் கிடைக்கும். ஆனால், NO COST EMI-யில் விலை தள்ளுபடி இருக்காது. முழு MRP-க்கு தான் வாங்குவீர்கள். மேலும், பிராசஸிங் கட்டணம், ஜிஸ்டி செலவு எல்லாம் இருக்கும். யோசிங்க!
News October 6, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

‘கல்வெட்டு செம்மல்’ என அழைக்கப்படும் பிரபல தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன்(85) இன்று காலமானார். தமிழக தொல்லியல் துறையின் இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் காசிநாதன் தலைமையில்தான் முதல்முறையாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வு நடந்தது. தமிழக அரசின் உவேசா விருது உள்பட பல விருதுகளை பெற்ற அவருக்கு, CM ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP