News February 26, 2025
இன்று இரவு இந்த 1 மணி நேரம் தூங்காதீர்கள்

மகா சிவராத்திரியான இன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இரவு 12 – 1 மணி வரையாவது விழித்திருங்கள். இது மிக முக்கியமான நேரம். இந்த நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என பெயராகும். சிவன், தன்னை லிங்கோத்பவராக வெளிக்காட்டிய நேரமும் இதுதான். பார்வதி, சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். அதுமட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தோட மொத்த சக்தி ஆற்றலும் இந்த பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான்.
Similar News
News February 26, 2025
‘Transformers’ புகழ் ராபர்டோ ஓர்சி காலமானார்

ஹாலிவுட்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான Star Trek(2009), ‘Transformers’, Transformers: Revenge of the Fallen உள்ளிட்ட படங்களின் கதாசிரியரும் தயாரிப்பாளருமான ராபர்டோ ஓர்சி(51), சிறுநீரக நோயால் காலமானார். சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகளுக்காக மிகவும் புகழ்பெற்ற இவர், ‘Mission Impossible III’ ‘The Legend of Zorro”The Mummy’ ‘The Amazing Spider-Man 2’ உள்ளிட்ட படங்களிலும் கதை & தயாரிப்பில் பங்களித்துள்ளார்.
News February 26, 2025
விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

தவெக 2ஆம் ஆண்டு விழாவில் பவுன்சர்களால் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், சோஷியல் மீடியாவிலும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் திமுகவின் ஆதரவாளர் என தவெகவினர் மேலே இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.
News February 26, 2025
சிறுவனின் வயிற்றில் 2 கால்கள்

உ.பி.யை சேர்ந்த சிறுவனுக்கு வழக்கமான 2 கால்கள் தவிர, வயிற்றிலும் 2 கால்கள் வளர்ந்தன. இதையடுத்து உடலில் தேவையின்றி வளர்ந்த அந்த 2 கால்களை அகற்ற, டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் வயிற்றில் வளர்ந்த 2 கால்களை ஆபரேசன் மூலம் டாக்டர்கள் அகற்றினர். வயிற்றில் இரட்டை கரு உருவாகி ஒரு கருவில் உருவான கால்கள், இதுபோல இன்னொரு கருவில் சேர்ந்து இருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.