News September 4, 2025
நாய்களுடனான உறவை சிதைக்க கூடாது: மிஷ்கின்

தெரு நாய்கள் விவகாரத்தில் 2 பக்கத்தின் பாதிப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். உயிர்வதை கொடுமையானது, அதே சமயம் நாய்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு, உணர்வு ரீதியான என்றும், அதை சிதைத்துவிடாமல் திட்டமிடல் இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
NDA கூட்டணி சிதைந்து வருகிறது: எம்ஆர்கே தாக்கு

டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், NDA கூட்டணி சிதைந்து வருவதாக விமர்சித்துள்ளார். EPS பரப்புரை பொய் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். மக்கள் மட்டுமின்றி, கூட்டணியில் இருப்பவர்களும் புரிந்துக் கொண்டதால், ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். இதனால், அதிமுக கூட்டணி பலவீனப்பட்டு விட்டதாகவும் சாடினார்.
News September 4, 2025
ஒரு மாசத்துக்கு ₹1.61 கோடி கரண்ட் பில்லா?

நெல்லையில் ஒரு குடும்பத்துக்கு ₹1.61 கோடி EB பில் வந்துள்ளது. இதுகுறித்து, EB-ல் விசாரித்த போது, இது டெக்னிக்கல் Issue & Human error எனவும், பில் ₹494 தான் என கூறியுள்ளனர். இது போல, கோடி கணக்கில் பில் வந்தால் கேள்வி எழுப்புவோம். கண்ணுக்கு தெரியாமல், சில நூறுகளையோ or ஆயிரங்களையோ உயர்த்தி பில் வந்தால், நஷ்டம் மக்களுக்கு தானே! எப்படி Human error என கூறலாம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News September 4, 2025
BREAKING: இபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானது

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஜூலையில் இபிஎஸ் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சூர்யமூர்த்தி என்பவர் தொடுத்த வழக்கை நிராகரிக்கக்கோரி, இபிஎஸ் தொடர்ந்த வழக்கை உரிமையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.