News June 12, 2024
கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்: ஜி.கே.வாசன்

‘நீட்’ தேர்வை அரசியலாக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தியாவை வல்லரசாக மாற்ற மோடி நடவடிக்கை எடுப்பார் என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
மூட்டு வலியை விரட்ட செய்யும் எளிய யோகா!

✦மூட்டு வலிகளை குறைத்து, கால் தசைகளுக்கு சுப்த பாதாங்குஸ்தாசனம் வலு சேர்க்கும்.
➥ தரையில் வானம் பார்த்தபடி படுக்கவும்.
➥கைகள் பக்கவாட்டில் நேராக இருக்க, வலது காலின் முட்டியை மடக்காமல் மேலே உயர்த்தவும்.
➥காலை உயர்த்திய நிலையில், வலது கை விரல்களால் காலை தொடவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்து விட்டு, பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, இடது காலிலும் செய்யவும். Share it to friends.
News September 10, 2025
வெள்ளை அறிக்கை மட்டும் விளங்கி விடுமா? TRB ராஜா

CM ஸ்டாலினின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று EPS வலியுறுத்தியிருந்தார். இதற்கு, வெள்ளை அறிக்கை கொடுத்தால் மட்டும் விளங்கிவிடுமா? என்று TRB ராஜா பதிலடி கொடுத்துள்ளார். CM முன்பு பயணித்த நாடுகளுடன் போடப்பட்ட 36 ஒப்பந்தங்களில் 12 ஒப்பந்தங்கள், உற்பத்தி நிலையை எட்டிவிட்டன என்றும், 11 நிறுவனங்களின் நில எடுப்பு பணிகள் நடப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
News September 10, 2025
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
பொருள்:
பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். SHARE IT.